Sunday, September 6, 2009

பல Twitter Account-கள் ஒரே Gmail Account-ல் - எப்படி ?



நம்மில் பலருக்கு ஒன்றிக்கு மேற்பட்ட Twitter Account
தேவைப்படலாம்.அதனை இரண்டு ஈமெயில் கணக்குகள்
வைத்து துவங்கலாம் .ஆனால் எப்படி ஒரு Gmail Account
மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட Twitter Account துவங்குவது
என்று பார்ப்போம் .

வழிமுறை 1:
நீங்கள் Gmail Account உருவாக்கும்போது ,அது இரண்டு
கணக்குகளை ஏற்படுத்தும்.உதரணமாக gramathaan@gmail.com
என்று கணக்கை துவங்கினால்,Gmail உங்களுக்கு gramathaan@googlemail.com என்றொரு Proxy கணக்கை ஏற்படுத்தும்.இதன் மூலம் நீங்கள் இன்னொரு
Twitter Account-ஐ தொடங்கலாம்.

நீங்கள் Twitter-ல் கீழ்கண்டவாறு ஈமெயில் முகவரி
கொடுத்தால் ஏற்று கொள்ளும்


வழிமுறை 2:
உங்கள் gmail Account Id gramathaan@gmail.com என்று வைத்து
கொள்வோம்.கீழே கொடுக்கப்பட்டுள்ள எல்லாமே
gramathaan@gmail.com Gmail AccountID தான்.எப்படி?

g.ramathaan@gmail.com
gr.amathaan@gmail.com
gra.mathaan@gmail.com
gram.athaan@gmail.com
grama.thaan@gmail.com
gramat.haan@gmail.com
gramath.aan@gmail.com
gramatha.an@gmail.com
gramathaa.n@gmail.com

நீங்கள் gramathaan@gmail.com என்று கணக்கை துவங்கிவிட்டால்
Gmail மற்ற எவருக்கும் gramathaan@gmail.com நடுவில் புள்ளி
வைத்து கணக்கை துவங்க அனுமதிக்காது.
உதாரணம் :


ஆனால் Twitter இதை இன்னொரு Email முகவரியாக
எடுத்து கொள்ளும் (g.ramathaan@gmail.com).அவ்வளவுதான்
இனி எத்தனை Twitter கணக்கை வேண்டுமானால் நீங்கள்
ஒரேயொரு Gmail Account-ல் இருந்து துவங்கலாம். Have Fun :)




2 comments

Thursday, September 3, 2009

Blogger-ன் வயசு 10 - வாழ்த்துவோம் வாருங்கள் ...!



  1. Meg, Paul and Ev இவர்கள் மூன்று பேரும் இணைந்து உருவாக்கியதுதான் Blogger.
  2. 1999 - ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதியில் Blogger உருவாக்கப்பட்டது.
  3. 2003-ஆம் ஆண்டு மாதத்திற்கு 2.5 லட்சம் வாசகர்களை கொண்டிருந்த Blogger-இன் இப்போதைய வாசகர்களின் எண்ணிக்கை 300 கோடிக்கும் மேல்.
  4. ஒவ்வொரு தனி மனிதனின் எண்ணங்களையும், ஆக்கங்களையும் அனைவருக்கும் சென்றடையும் வகையில் ,இலவசமாக இந்த சேவையை நமக்கு வழங்கி கொண்டிருக்கும் கூகுளுக்கு நன்றி சொல்வோம்.
  5. பத்தே ஆண்டுகளில் மாபெரும் புரட்சி ஏற்படுத்திய கூகுளின் சேவை தொடர வாழ்த்துவோம் வாருங்கள்...
10 ஆண்டுகள் ஆனதை சிறப்பிக்க கூகுள் பல Gadget-களை
வழங்குகின்றது .அதில் ஒன்று தன் NavBar-ல் புதியதாக
இணைக்கப்பட்டுள்ள SHARE பட்டன் .



இதன் மூலம் நமது வலைத்தளத்துக்கு வரும் வாசகர்கள்
எளிதாக நமது பதிவை பகிர்ந்து கொள்ள முடியும் .




Blogger பல பத்தாண்டுகளை காண வாழ்த்துங்கள்....
8 comments
Blog Widget by LinkWithin
 

Gramathu Payyan. Copyright 2009 All Rights Reserved