Sunday, September 6, 2009

பல Twitter Account-கள் ஒரே Gmail Account-ல் - எப்படி ?



நம்மில் பலருக்கு ஒன்றிக்கு மேற்பட்ட Twitter Account
தேவைப்படலாம்.அதனை இரண்டு ஈமெயில் கணக்குகள்
வைத்து துவங்கலாம் .ஆனால் எப்படி ஒரு Gmail Account
மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட Twitter Account துவங்குவது
என்று பார்ப்போம் .

வழிமுறை 1:
நீங்கள் Gmail Account உருவாக்கும்போது ,அது இரண்டு
கணக்குகளை ஏற்படுத்தும்.உதரணமாக gramathaan@gmail.com
என்று கணக்கை துவங்கினால்,Gmail உங்களுக்கு gramathaan@googlemail.com என்றொரு Proxy கணக்கை ஏற்படுத்தும்.இதன் மூலம் நீங்கள் இன்னொரு
Twitter Account-ஐ தொடங்கலாம்.

நீங்கள் Twitter-ல் கீழ்கண்டவாறு ஈமெயில் முகவரி
கொடுத்தால் ஏற்று கொள்ளும்


வழிமுறை 2:
உங்கள் gmail Account Id gramathaan@gmail.com என்று வைத்து
கொள்வோம்.கீழே கொடுக்கப்பட்டுள்ள எல்லாமே
gramathaan@gmail.com Gmail AccountID தான்.எப்படி?

g.ramathaan@gmail.com
gr.amathaan@gmail.com
gra.mathaan@gmail.com
gram.athaan@gmail.com
grama.thaan@gmail.com
gramat.haan@gmail.com
gramath.aan@gmail.com
gramatha.an@gmail.com
gramathaa.n@gmail.com

நீங்கள் gramathaan@gmail.com என்று கணக்கை துவங்கிவிட்டால்
Gmail மற்ற எவருக்கும் gramathaan@gmail.com நடுவில் புள்ளி
வைத்து கணக்கை துவங்க அனுமதிக்காது.
உதாரணம் :


ஆனால் Twitter இதை இன்னொரு Email முகவரியாக
எடுத்து கொள்ளும் (g.ramathaan@gmail.com).அவ்வளவுதான்
இனி எத்தனை Twitter கணக்கை வேண்டுமானால் நீங்கள்
ஒரேயொரு Gmail Account-ல் இருந்து துவங்கலாம். Have Fun :)





2 comments:

ஊர்சுற்றி on September 6, 2009 at 11:29 PM said...

நேற்றுதான் இதற்கு ஏதாவது வழி இருக்கிறதா என்று யோசித்துக்கொண்டிருந்தேன். முயற்சிசெய்து பார்த்துவிட்டு திரும்பவும் வருகிறேன். :)

ரெட்மகி on September 6, 2009 at 11:36 PM said...

நன்றி ஊர்சுற்றி தங்கள் வருகைக்கு

Post a Comment

Blog Widget by LinkWithin
 

Gramathu Payyan. Copyright 2009 All Rights Reserved