Sunday, September 6, 2009

பல Twitter Account-கள் ஒரே Gmail Account-ல் - எப்படி ?



நம்மில் பலருக்கு ஒன்றிக்கு மேற்பட்ட Twitter Account
தேவைப்படலாம்.அதனை இரண்டு ஈமெயில் கணக்குகள்
வைத்து துவங்கலாம் .ஆனால் எப்படி ஒரு Gmail Account
மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட Twitter Account துவங்குவது
என்று பார்ப்போம் .

வழிமுறை 1:
நீங்கள் Gmail Account உருவாக்கும்போது ,அது இரண்டு
கணக்குகளை ஏற்படுத்தும்.உதரணமாக gramathaan@gmail.com
என்று கணக்கை துவங்கினால்,Gmail உங்களுக்கு gramathaan@googlemail.com என்றொரு Proxy கணக்கை ஏற்படுத்தும்.இதன் மூலம் நீங்கள் இன்னொரு
Twitter Account-ஐ தொடங்கலாம்.

நீங்கள் Twitter-ல் கீழ்கண்டவாறு ஈமெயில் முகவரி
கொடுத்தால் ஏற்று கொள்ளும்


வழிமுறை 2:
உங்கள் gmail Account Id gramathaan@gmail.com என்று வைத்து
கொள்வோம்.கீழே கொடுக்கப்பட்டுள்ள எல்லாமே
gramathaan@gmail.com Gmail AccountID தான்.எப்படி?

g.ramathaan@gmail.com
gr.amathaan@gmail.com
gra.mathaan@gmail.com
gram.athaan@gmail.com
grama.thaan@gmail.com
gramat.haan@gmail.com
gramath.aan@gmail.com
gramatha.an@gmail.com
gramathaa.n@gmail.com

நீங்கள் gramathaan@gmail.com என்று கணக்கை துவங்கிவிட்டால்
Gmail மற்ற எவருக்கும் gramathaan@gmail.com நடுவில் புள்ளி
வைத்து கணக்கை துவங்க அனுமதிக்காது.
உதாரணம் :


ஆனால் Twitter இதை இன்னொரு Email முகவரியாக
எடுத்து கொள்ளும் (g.ramathaan@gmail.com).அவ்வளவுதான்
இனி எத்தனை Twitter கணக்கை வேண்டுமானால் நீங்கள்
ஒரேயொரு Gmail Account-ல் இருந்து துவங்கலாம். Have Fun :)




2 comments

Thursday, September 3, 2009

Blogger-ன் வயசு 10 - வாழ்த்துவோம் வாருங்கள் ...!



  1. Meg, Paul and Ev இவர்கள் மூன்று பேரும் இணைந்து உருவாக்கியதுதான் Blogger.
  2. 1999 - ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதியில் Blogger உருவாக்கப்பட்டது.
  3. 2003-ஆம் ஆண்டு மாதத்திற்கு 2.5 லட்சம் வாசகர்களை கொண்டிருந்த Blogger-இன் இப்போதைய வாசகர்களின் எண்ணிக்கை 300 கோடிக்கும் மேல்.
  4. ஒவ்வொரு தனி மனிதனின் எண்ணங்களையும், ஆக்கங்களையும் அனைவருக்கும் சென்றடையும் வகையில் ,இலவசமாக இந்த சேவையை நமக்கு வழங்கி கொண்டிருக்கும் கூகுளுக்கு நன்றி சொல்வோம்.
  5. பத்தே ஆண்டுகளில் மாபெரும் புரட்சி ஏற்படுத்திய கூகுளின் சேவை தொடர வாழ்த்துவோம் வாருங்கள்...
10 ஆண்டுகள் ஆனதை சிறப்பிக்க கூகுள் பல Gadget-களை
வழங்குகின்றது .அதில் ஒன்று தன் NavBar-ல் புதியதாக
இணைக்கப்பட்டுள்ள SHARE பட்டன் .



இதன் மூலம் நமது வலைத்தளத்துக்கு வரும் வாசகர்கள்
எளிதாக நமது பதிவை பகிர்ந்து கொள்ள முடியும் .




Blogger பல பத்தாண்டுகளை காண வாழ்த்துங்கள்....
8 comments

Windows 7 DVD இலவசமாக கிடைக்க ஒரு அரிய வாய்ப்பு



வருகின்ற அக்டோபர் மாதம் 22-ஆம் தேதி மைக்ரோசாப்ட்
அதிரகாரபூர்வமாக, அதன் புதிய இயங்குதளமான Windows 7-ஐ
வெளியிடுகின்றது .

இவ்வெளியிடுதலை சிறப்பிக்கவும் , வாடிக்கையாளர்களை
கவரவும் அது ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடத்துகின்றது.இதில் நாம்
பதிவு செய்து கொண்டால் போதும்,நாம் தேர்வு செய்யப்பட்டால்
நமக்கு ஒரு Windows 7 Special Signature Edition மைக்ரோசாப்ட்
இலவசமாக வழங்கும் .

Windows 7 இலவசமாக கிடைக்க ஒரு அரிய வாய்ப்பு....
நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இந்த சுட்டியை
சொடுக்கி பதிவு செய்து கொள்ளுங்கள்.

இப்போட்டியில் கலந்து கொள்ள...

1.உங்களுக்கு 21 வயது பூர்தி அடைந்திருக்க வேண்டும்.
2.நீங்கள் India, US, UK, Australia, Canada, Germany, Japan,
Mexico, Italy, Spain or Hong Kong
வசிக்க வேண்டும்.
3.நீங்கள் Windows LiveId அல்லது FaceBookID உபயோக்கிக்கலாம் .
4.நீங்கள் Windows LiveId அல்லது FaceBookID உபயோகம்
செய்தால் வெல்லும் வாய்ப்புகள் அதிகம்.


ஒரு 5 நிமிடம் ஒதுக்குங்கள்...

Get Windows 7 Have Fun :)

2 comments

Tuesday, September 1, 2009

இணையத்தின் வயது 40 - சில ஆச்சரிய தகவல்கள்



நமது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகிவிட்ட
இணையத்தின் வயது 40.நாற்பது ஆண்டுகளுக்கு முன்
இரண்டு கணினிக்கு தகவல் பரிமாற்றம் செய்யத் தொடங்கி
இன்று அபார வளர்ச்சி அடைந்து இருக்கின்றது.

இணையத்தின் வளர்ச்சி படிகள் - சில ஆச்சரிய தகவல்கள்

1969 :
செப்டம்பர் 2-ஆம் தேதி ,கலிபோர்னியா பல்கலைகழகத்தில்
இரண்டு கணினிகள் சில தகவல்களை பரிமாறிகொண்டன.
இது Arpanet ,ராணுவத்தின் சோதனை இணையமாகும்.

1972:
Ray Tomilinson மின்னஞ்சலை மற்ற கணினிகளுக்கு அனுப்பும்
முறையை கண்டுபிடித்தார்.

1973 :
Arpanet மூலம் இங்கிலாந்து மற்றும் நார்வே நாடுகளில்
வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.

1974 :
Viant Cerf and Bob kahn தகவல் தொடர்பில் ஒரு புரட்சியான
TCP உருவாக்கினர்.இதன் மூலந்தான் உண்மையான இணையம்
உருவானது.

1983 :
வலைத்தளங்களுக்கு Domain Name System கொண்டு வரப்பட்டது
".com".அடுத்த வருடங்களில் ".gov" and ".edu" அறிமுகபடுத்தபட்டது.

1988 :
இணையத்தை தாக்கியது Internet Worm Morris ,ஆயிரக்கணக்கான
கணினிகள் சேதமடைந்தன.

1990 :
Tim Berners-Lee World Wide Web (WWW) உருவாக்கினர்.

1994 :
Andreessen மற்றும் குழுவினர் உலகின் முதல் கமர்ஷியல்
இணைய உலாவியான Netscape- உருவாக்கினர்.

1998 :
Larry Page and Sergey Brin கூகுளை உருவாக்கினர் Stanford பல்கலைகழகத்தில்.

1999 :
Napster ஒரு பெரும் புரட்சியை இசை கோப்புகளை பரிமாறுவதிலும்
வாங்குவதிலும் ஏற்படுத்தியது.

2000 :
இணைய தளங்கள் அதிகமாக தொடங்கியது.

2004 :
Mark Zuckerberg Facebook- உருவாக்கினர் Harvard பல்கலைகழகத்தில்.

2005 :
வீடியோ படங்களை பகிர்ந்து கொள்ள உதவும் Youtube உருவானது .

2007 :
Apple Iphone- வெளியிட்டது ,இதன் மூலம் லட்சகனக்கனர்வர்கள்
இணையத்தை உபயோகப்படுத்த தொடங்கினர்.

2008 :
Twitter உதயம்...

உலகம் முழுவதும் இணையம் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை:

  1. China - 29.8 கோடி (22.4%)
  2. USA - 22.7 கோடி (74.7%)
  3. Japan - 9.4 கோடி (73.8%)
  4. India - 8.1 கோடி (7.1%)
  5. Brazil - 6.8 கோடி (34.3%)
  6. Germany - 5.5 கோடி (67%)
  7. UK - 4.8 கோடி (72%)
  8. France - 4.1 கோடி (66%)
  9. Russia - 3.8 கோடி (27%)
  10. S.Korea - 3.7 கோடி (76%)
  11. Australia - 1.7 கோடி (80.6%)
(Figures in brackets denotes percentage of nations population who use internet)

உலகம் முழுதும் இணையம் உபயோகிப்பவர்கள்:

  1. 1999 - 2.5 கோடி
  2. 2002 - 50 கோடி
  3. 2006 - 100 கோடி
  4. 2008 - 150 கோடி
நன்றி:Times of India
2 comments
Blog Widget by LinkWithin
 

Gramathu Payyan. Copyright 2009 All Rights Reserved